காசிமேடு சந்தையில் மீன்களின் விலை குறைந்தது
சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க மீன்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. வார விடுமுறை நாளான இன்று ஏராளமானோர் மீன்கள் வாங்க குவிந்தனர். இதனால், மீன் சந்தை களைகட்டியது. மேலும், சந்தைக்கு மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மீன்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. ரூ.1400க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் இன்று ரூ.600க்கே கிடைத்ததால் அதிகம் பேர் வாங்கிச் சென்றனர். அத்துடன் பாறை, கடம்பா, இறால் ஆகியவற்றின் விலையும் குறைந்தது. NEWS EDITOR : RP