பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு IN ELECTRIC TRAIN
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடத்திலும் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2-ந்தேதி சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டி ஓடினர். இச்சம்பவத்தில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சிகிசை பெற்று வந்த…