பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்..!!

தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹுவாஸ்காரன்’ மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்ஃபில் என்ற மலையேற்ற வீரர் அவரது நண்பர்களான மேத்யூ ரிச்சர்ட்சன், ஸ்டீவ் எர்ஸ்கைன் ஆகியோருடன் ஹுவாஸ்காரன் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வில்லியம் ஸ்டாம்ஃபில் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.இந்நிலையில் 22…

மேலும் படிக்க

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம்..!!

சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.  உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான ஆலோசகர் நிறுவனத்தை பணியமர்த்த,  அதற்கான ஒப்பந்த புள்ளி வெளியாகி உள்ளது. அதன்படி, விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்,  அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான மின்னணு மூலம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில்…

மேலும் படிக்க

அண்ணா நீச்சல் குளம் மூடப்பட்டது

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் நேற்று குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை அண்ணா நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. NEWS EDITOR…

மேலும் படிக்க

சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல்

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ‘நடவடிக்கையில் இறங்கு’ திட்டத்தின் கீழ் சென்னை கிருஷ்ணாம்பேட்டை வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர தூய்மை பணியை ஆய்வு செய்தார். பின்னர் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில், சாலையோர கடைகள் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகள், கட்டிட கழிவுகள் மற்றும் நீண்டநாட்களாக பயன்பாடு இன்றி கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றி அந்த பகுதியை தூய்மையாக வைத்திடுமாறு பொதுமக்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களிடம் கமிஷனர் அறிவுறுத்தினார். கமிஷனர்…

மேலும் படிக்க

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை..!!

சென்னையில் கீழ்ப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம்,அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், கிண்டி, போரூர், கே.கே நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான…

மேலும் படிக்க

கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 11.20 மணிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், “கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடை 1-ல் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. சரியாக 11 மணிக்கு அது வெடிக்கும்” என மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என 11.20 மணிக்கு மர்மநபர் தகவல் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இது புரளியாக இருக்கலாம் என கருதினர்….

மேலும் படிக்க

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு படையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த மாதம் 13…

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு பயணிகள் அவதி

சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரெயில் மூலம் அலுவலகம், கல்லூரிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலான நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ சேவை இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் – விம்கோ நகர் பணிமனைக்கு செல்லும் தடத்தில் மின் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைசுங்கச்சாவடி மெட்ரோ முதல் விம்கோ நகர்…

மேலும் படிக்க

பெண்களை செல்போனில் ஆபாசமாக’வீடியோ’எடுத்து சித்தரித்து விற்பனை பட்டதாரி கைது

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தெற்கு மண்டல ‘சைபர் கிரைம்’ போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பிரபல ஜவுளி நிறுவனத்தில் துணி எடுக்க சென்றிருந்தேன். அப்போது எனக்கு தெரியாமல் யாரோ என்னை படம்பிடித்து, ஆபாசமாக சித்தரித்து, ‘டெலிகிராம்’ செயலியில் விற்பனை செய்து வருகின்றனர்’ என்ற அதிர்ச்சி தகவலை கூறி இருந்தார். இந்த புகார் மனு குறித்து சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபி…

மேலும் படிக்க

பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு IN ELECTRIC TRAIN

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடத்திலும் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2-ந்தேதி சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டி ஓடினர். இச்சம்பவத்தில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சிகிசை பெற்று வந்த…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram