வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இதில் கூம்பூர், வேடசந்தூர், மடத்துப்பாளையம், கிரியப்பநாயக்கனூர், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44 விவசாயிகள் 686 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஈரோடு, முத்தூர், காங்கயம், நடுப்பாளையம், சித்தோடு, பூனாட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். நல்ல தரமான சூரியகாந்தி விதை ரூ.51.16-க்கும், 2-ம் தர சூரியகாந்தி விதை ரூ.47.63-க்கும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.16 லட்சத்து 10 ஆயிரத்து 724-க்கு ஏலம் நடைபெற்றது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: