மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து ரெயில் மூலம் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தனர்.
அங்கிருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து டெல்லிக்கு ரெயில் மூலமாக செல்ல முயன்றனர். இதையறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று காலை 7.30 மணி அளவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: