மத்தியபிரதேச மாநிலம் போபாலின் ராணி கமல்பதி நகரில் இருந்து டெல்லியின் ஹஸ்ரத் நிசாமுதின் நகர் வரை வந்தேபாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வந்தேபாரத் ரெயில் நேற்று காலை 10 மணியளவில் மத்தியபிரதேசத்தின் மொரினா மாவட்டம் பென்மோர் ரெயில் நிலையம் அருகே வந்தது. அப்போது, வந்தேபாரத் ரெயில் மீது கல்வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்புப்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விசாரணை மேற்கொண்ட ரெயில்வே பாதுகாப்புப்படையினர் வந்தேபாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய பெரோஷ் கான் (வயது 20) என்ற இளைஞரை நேற்று இரவு கைது செய்தனர். இந்த தாக்குதலில் வந்தேபாரத் ரெயிலின் கண்ணாடி உடைந்தது.
NEWS EDITOR : RP
Please follow and like us: