நைட்ரஜனை பிஸ்கெட் உடன் சேர்த்து சாப்பிடும் போது வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை பொழுதுபோக்கான உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கெட் விற்பனை செய்யப்பட்டுவதை பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கெட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று ஆவியாகுதல் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பு ஆபாயமும் ஏற்படும்.
‘ஸ்மோக் பிஸ்கட்’ குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை..!!
Please follow and like us: