ஆயுத பூஜையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மார்க்கெட்டில் கரும்பு மற்றும் மலர்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது கரும்பு விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கரும்பு 800 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மேலும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூ கிலோ 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. பிச்சிப் பூ 700 ரூபாய்க்கும், முல்லைப் பூ 700 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வந்தி, துளசி ஆகியவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் என்பதாலும், வரத்து குறைந்ததாலும் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், சென்னை கோயம்பேட்டில் ஆயுத பூஜைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு சந்தை மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக சந்தை இயங்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சிறப்பு சந்தையானது, உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP