தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-6491675465789310&output=html&h=280&adk=3979922428&adf=4218550585&pi=t.aa~a.799940181~i.11~rp.4&w=720&fwrn=4&fwrnh=100&lmt=1698482827&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4289625891&ad_type=text_image&format=720×280&url=https%3A%2F%2Fnews7tamil.live%2Foperation-of-diwali-special-buses-from-nov-9-minister-sivashankars-announcement.html&fwr=0&pra=3&rh=180&rw=720&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTE4LjAuNTk5My45MCIsW10sMCxudWxsLCI2NCIsW1siQ2hyb21pdW0iLCIxMTguMC41OTkzLjkwIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTE4LjAuNTk5My45MCJdLFsiTm90PUE_QnJhbmQiLCI5OS4wLjAuMCJdXSwwXQ..&dt=1698482852703&bpp=1&bdt=2076&idt=-M&shv=r20231025&mjsv=m202310250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De73e744052c8ea5a-225b193496e1000b%3AT%3D1685563380%3ART%3D1698482832%3AS%3DALNI_MbKmSLNlfjJvHE0z3CQkQHJTpInFA&gpic=UID%3D00000c0d91516e16%3AT%3D1685563380%3ART%3D1698482832%3AS%3DALNI_MZ5eZtnGs_uBj6AZ7RnXDCxcDQN3Q&prev_fmts=0x0%2C720x180&nras=2&correlator=2839168616018&frm=20&pv=1&ga_vid=1314985731.1685563385&ga_sid=1698482852&ga_hid=1539310393&ga_fc=1&ga_cid=1065395060.1698482833&u_tz=330&u_his=3&u_h=699&u_w=1242&u_ah=662&u_aw=1242&u_cd=24&u_sd=0.99&dmc=8&adx=161&ady=1225&biw=1362&bih=615&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C31079080%2C31079083%2C44795922%2C44805931%2C44806737%2C31078297%2C31079247%2C44803793%2C44806250%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=120793264008793&tmod=2128323028&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fnews7tamil.live%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1242%2C0%2C1242%2C662%2C1380%2C615&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&td=1&nt=1&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=6hZqvUbSWG&p=https%3A//news7tamil.live&dtd=133
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, நவம்பர் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,467 பேருந்துகள், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங் ரோடு (Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து, கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
NEWS EDITOR : RP