திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான மகளிர் கோகோ போட்டிகள் இன்று (டிச.26) தொடங்கி டிச. 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.முதல்முறையாக மத்திய அரசு சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் பெண்களுக்கான மகளிர் கோகோ போட்டிகள் இன்று தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய பல்கலைக்கழகங்களின் சங்க இணைச்செயலாளர் பல்ஜித் சிங் செகோன் பங்கேற்றார்.
Please follow and like us: