விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.அண்மையில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி, உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து ’83’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை கதை, ’சபாஷ் மித்து’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இதில் டாப்ஸி நாயகியாக நடிக்கிறார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ‘கொல்கத்தா தாதா’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பதும் உண்டு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தலைமையிலான படக்குழுவினர் சமீபத்தில் சவுரவ் கங்குலியை சந்தித்து, அவரது வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்த அனுமதியை பெற்றுள்ளனர். மேலும் சவுரவ் கங்குலியை சந்தித்து அவரது எழுச்சி மற்றும் சோதனை காலங்கள் குறித்த விவரங்களை நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் கேட்டு தெரிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை தனதாக்கிய சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கிறார். இந்த படத்துக்காக ஆயுஷ்மான் குரானா, ஓரிரு மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ள இருக்கிறார். படத்துக்காக கங்குலி போல சில ஷாட்களை அடித்து ஆட கற்றுக்கொள்ள இருப்பதாகவும் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP