உலர் திராட்சை உடலுக்கு ஆரோக்கியத்திற்கு கொடுக்கின்றன. மேலும் அவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த நீரை குடிக்கும் போது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கொடுக்கின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.ஊட்டச்சத்துக்கள்: உலர் திராட்சைகளில் வைட்டமின்கள், மினரல்கள், இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கின்றன.
செரிமானம்: உலர் திராட்சையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.
ஊக்கம்: திராட்சைகளில் இயற்கையாகவே இனிப்பு இருப்பதால் இழந்து போன எனெர்ஜியை உடனடியாக மீட்டு தர உதவுகின்றன. இந்த நீர் உடலுக்கு எனெர்ஜியை கொடுப்பதால் கண்டிப்பாக குடிக்கலாம்.
இதய ஆரோக்கியம்: உலர் திராட்சைகளில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கின்றன. இதனால் இதயம் சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
சரும பராமரிப்பு: ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால் உலர் திராட்சை நீரை பருகும் போது வயதாவதை தடுத்து சருமத்தை இளமையாக வைத்திருக்கின்றன.
எடை குறைப்பு: இந்த நீரை குடிப்பதால் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கின்றன. இவை எடை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு உதவுகின்றன.
எலும்பு: கால்சியம் சத்துக்கள் நிறைந்து இருப்பதை உலர் திராட்சை நீரை குடிக்கும்போது எலும்புகள் வலுவடைகின்றன.