உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும், பரியேறும் பெருமாள் இயக்குநரின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது. மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல ஓபனிங் இருந்தது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு ஓபனிங் வந்ததில்லை எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வார இறுதி என்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
NEWS EDITOR : RP
Please follow and like us: