உத்திரபிரதேசத்தில் 35 நாள்களில் 6 முறை ஒரே மனிதனை சீண்டிய பாம்புகள்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் விகாஸ் துபே. இவரை கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 6 முறை பாம்பு கடித்துள்ளதாம். ஒவ்வொரு முறையும் பாம்புகள் அவரை கடிப்பதும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதும், பிறகு குணமடைந்து வீடு திரும்புவதும் தொடர்கதையாக இருந்திருக்கிறது.

கடந்த ஜூன் 2ம் தேதி இந்த அத்தியாயத்தின் முதல் சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் அவரது வீட்டில் பாம்பு புகுந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த அவர் அப்போது தான் எழுந்துள்ளார். எல்லா மனிதர்களைப் போல இவரும் தேநீர் எதிர்பார்த்திருப்பார் போல. ஆனால், அவருக்கு கிடைத்ததோ பாம்பு கடி. இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு கடந்த ஜூலை 6-ம் தேதி வரை மட்டும் துபேவை ஆறு முறை பாம்பு கடித்துள்ளதாம்.இந்த அத்தியாயத்தில், முதல் 4 முறை அவர் வீட்டில் இருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதனால் அவரது வீட்டில் இருந்தவர்களே துபேவை பார்த்து அஞ்சியுள்ளனர். “வீட்ல இருந்தா தான கடிக்கிது, இனிமேல் வீட்ல இருக்காத” என்று யாரோ துபேவிற்கு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் அவரை பாம்பு கடிக்கும் சம்பவம் தொடர்ந்துள்ளது.அவை அனைத்தும் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் தான் நடந்துள்ளன. மேலும், ஒவ்வொரு முறையும் பாம்பு தன்னை கடிப்பதற்கு முன்பும் ஏதோ நடக்கப் போகிறது என தோன்றியதாக அவர் கூறுகிறார். எனவே எனக்கு நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் ஏதோ இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram