தமிழில் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் கல்யாணி. சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் டைரக்டர் பிரியதர்ஷன்-நடிகை லிசியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜோஷி இயக்கத்தில் தயாராகி வரும் ஆண்டனி என்ற மலையாள படத்தில் கல்யாணி நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத் ஜொஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் கல்யாணி பங்கேற்கும் சில அதிரடி சண்டை காட்சிகள் உள்ளன. இந்த சண்டை காட்சியை படமாக்கியபோது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு கல்யாணிக்கு காயங்கள் ஏற்பட்டன. கையில் சிராய்ப்பு காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் கல்யாணி வெளியிட்டு உள்ளார். சண்டை என்பது பலவீனமானவர்களுக்கானது அல்ல என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
NEWS EDITOR : RP