திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இமைகள் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தோரணம்பதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில் பெண்கள், குழந்தைகள், மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
NEWS EDITOR : RP
Please follow and like us: