ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் பார்க்கிங். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
Please follow and like us: