சீனாவின் Zhejiang மாகாணத்தின் Taizhou-வைச் சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவர் ஜியாங். இவர் தனது பெற்றோர் கல்வி செலவுக்காக கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அடிக்கடி ஹோட்டல்களுக்கு சென்று தங்குவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். அங்கு ஹோட்டல் அறைகளில் இறந்த கரப்பான் பூச்சி, பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், தலைமுடி, சிள் வண்டு போன்றவற்றை வைத்துவிட்டு, பின்னர் ஒன்றும் தெரியாதது போல், ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து அறை சுத்தமாக இல்லை என புகார் செய்வார். தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது தான் தங்குவதற்கு பணம் கேட்கக்கூடாது எனக்கூறி வந்துள்ளார். மேலும் சுத்தம் இல்லாத அறையை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு ஹோட்டல் குறித்து அவதூறு பரப்புவேன் எனவும் மிரட்டுவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
சீனாவில் சுத்தமின்மையை காரணம் காட்டி ஹோட்டல்களில் இழப்பீடு கோரி மோசடி..!!
Please follow and like us: