நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த நம்பி நகரில் சுட்டிப்பாறை குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக கேரளாவிலிருந்து லாரிகள் மூலம் குப்பைகளை மூட்டை மூட்டையாக ஏறி ஆள்நடமாட்டம் இல்லாத போது இரவு நேரத்தில் கொட்டிவிட்டு செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பின்னர் குப்பைகளுக்கு தீ வைத்து செல்வதால் நச்சுப்புகை பரவி வருவதால் இதன் சுற்றுவட்டார பகுதியில் சுவாசக் காற்றில் நச்சு கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் கால்நடைகள் குப்பைகளை கிளறி கழிவுகளை உண்பதால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குப்பைகள் தீயில் எறிந்து சாம்பல் மண்ணில் கலந்து நிலத்தடியில் நீரில் கலக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். காவல்துறையினர் கண்காணித்து கழிவுகளை கொட்டிச் செல்லும் சமூக விரோதிகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
NEWS EDITOR : RP