கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது. தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார் ரொனால்டோ. இந்நிலையில் இப்போது அவர் யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் அவர் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவுள்ளார்.
Please follow and like us: