இம்மாதத்திற்கான எண்ணெய், பருப்பு வாங்காதவர்கள் அதனை ஜூன் மாதம் முதல் வாரம் வரை வாங்கிக் கொள்ளலாம் என உணவுப்பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, ஒப்பந்த புள்ளிகளை இறுதிசெய்து பாமாயில், துவரம்பருப்புகளை கொள்முதல் செய்வதில் தாமதமானது. இதனால் மே மாதத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோருக்கு பொருட்கள் கிடைக்கவில்லை.மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு மே 27ஆம் தேதி வரை 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும் 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை ஜூனிலும் பெறலாம் ~ தமிழ்நாடு அரசு..!!
Please follow and like us: