கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். கைதான 15 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 15 மீனவர்களை வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி கஜநதி பாலன் உத்தரவிட்டார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: