உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஹெட்வெர் துபே (வயது 74). மாநிலங்களவை எம்.பி.யான இவர் உத்தரபிரதேச மாநில மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். இதனிடையே, வயது முதிர்வு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஹெட்வெர் துபே கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாஜக எம்.பி. ஹெட்வெர் துபே இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உ.பி. முதல்-மந்திரி உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: