காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 22ம் தேதி இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றார். அம்பாலா அருகே ராகுல் காந்தி லாரியில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணைய தளத்தில் வைரலாகியது.
கனரக லாரி டிரைவர்கள் இரவு முழுவதும் லாரி ஓட்டும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி இரவு நேரத்தில் லாரியில் ஏறி பயணம் செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதிக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி திடீரென வந்தார். அங்கு டூ வீலர் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்பிற்குள் நுழைந்த அவர் அங்கிருந்த மெக்கானிக்குடன் அமர்ந்து இரு சக்கர வாகனங்களை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
NEWS EDITOR : RP