கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தூணாக விளங்கியவர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட உம்மன்சாண்டி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் உம்மன்சாண்டி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. அப்போது அவரது மனைவி மரியம்மா உம்மன், மகன் சாண்டி உம்மன், மகள்கள் அச்சு உம்மன், மரியா உம்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியின் இறுதி சடங்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உம்மன்சாண்டியின் உடல் நாளை பிற்பகல் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்-மந்திரி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலுன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP