செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்கா
சுபாஷ்கரனின் ‘சந்திரமுகி 2’ படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவா
லாரன்ஸ் அவருடைய குருவும், ‘சந்திரமுகி’ படத்தின் நாயகனும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றார்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படைப்பாகத் தயாரான புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா
ரணாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி
மேனன், சிருஷ்டி டாங்கே, விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், ராவ் ரமேஷ்,
சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6491675465789310&output=html&h=180&slotname=1945675328&adk=2747501033&adf=475522167&pi=t.ma~as.1945675328&w=720&fwrn=4&lmt=1695749961&rafmt=11&format=720×180&url=https%3A%2F%2Fnews7tamil.live%2Fbefore-the-chandramuki-movie-released-raghava-laurance-blessed-for-rajinikanth.html&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTE3LjAuNTkzOC45MiIsW10sMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjExNy4wLjU5MzguOTIiXSxbIk5vdDtBPUJyYW5kIiwiOC4wLjAuMCJdLFsiQ2hyb21pdW0iLCIxMTcuMC41OTM4LjkyIl1dLDBd&dt=1695750109972&bpp=1&bdt=1037&idt=156&shv=r20230921&mjsv=m202309190101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De73e744052c8ea5a-225b193496e1000b%3AT%3D1685563380%3ART%3D1695749843%3AS%3DALNI_MbKmSLNlfjJvHE0z3CQkQHJTpInFA&gpic=UID%3D00000c0d91516e16%3AT%3D1685563380%3ART%3D1695749843%3AS%3DALNI_MZ5eZtnGs_uBj6AZ7RnXDCxcDQN3Q&correlator=288318449484&frm=20&pv=2&ga_vid=1314985731.1685563385&ga_sid=1695750110&ga_hid=1109707010&ga_fc=1&rplot=4&u_tz=330&u_his=3&u_h=699&u_w=1242&u_ah=662&u_aw=1242&u_cd=24&u_sd=0.88&dmc=8&adx=246&ady=1161&biw=1532&bih=692&scr_x=0&scr_y=0&eid=44759926%2C44759837%2C44759875%2C44795922%2C44796896%2C44798323%2C31067146%2C31067147%2C31067148%2C31068556&oid=2&pvsid=3554025561240761&tmod=680520865&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fnews7tamil.live%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1242%2C0%2C1242%2C662%2C1553%2C692&vis=1&rsz=%7C%7Cpebr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&td=1&nt=1&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=ejAj38pXBF&p=https%3A//news7tamil.live&dtd=166
ஆர். டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஆக்சன்
காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. லைக்காவின் ‘சந்திரமுகி 2’ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
செப்டம்பர் 28 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன் பதிவு
தற்போது தொடங்கி இருக்கிறது. தொடங்கியவுடன் ரசிகர்கள் உற்சாகமாக படத்தினை
காண்பதற்கு முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் நாயகனும்,
நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், குருவாக போற்றி வணங்கும்
ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ‘சந்திரமுகி 2 படம் மாபெரும்
வெற்றி பெறும்’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தையும், ஆசியையும் ராகவா
லாரன்ஸிற்கு வழங்கியிருக்கிறார்.
NEWS EDITOR : RP