இந்தோனேசியாவின் பிரதான தீவான கிழக்கு ஜாவா தீவில் உள்ளது லாமங்கன் நகரம். இங்குள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் முக்காடுகளை சரியாக அணியாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் ஆசிரியர் தண்டனை வழங்கியிருக்கிறார். 14 மாணவிகளின் தலைமுடியை பாதி அளவுக்கு ஷேவ் செய்துள்ளார். இதனால் மாணவிகள் அவமானத்தில் கூனிக்குறுகினர்.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: