திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி இந்து கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலை நாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ, பொறியியல், நர்சிங் படித்தவர்கள் கலந்துகொண்டு தனியார் துறையில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம்.
இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். கலந்து கொள்ள அனுமதி இலவசம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
NEWS EDITOR : RP