Spread the love

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2025-ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்! இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒரு பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்” என்று தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “2025-ம் ஆண்டு இனிதாக அமையட்டும்! இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகள்,வெற்றி மற்றும் முடிவில்லா மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Spread the love

By Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram