தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் கட்டித்தருவது உள்ளிட்ட உதவிகளை வழங்க இந்த திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறுமையான நிலையில் உள்ள 5 லட்சம் ஏழை குடும்பத்தினருக்கு, அனைத்து அரசு உதவிகளையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடர்பாக 5 கிராமங்கள் மற்றும் 2 நகர்புற பகுதிகளிலும் முதல் கட்ட ஆய்வு தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Please follow and like us:
