நடிகர் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத்தை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2019-ல் முதுகுவலி காரணமாக மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரபுதேவா சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் காதல் மலர்ந்தது.
2020-ம் ஆண்டு ஹிமானி சிங்கை, பிரபுதேவா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ரகசியமாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சமீபத்தில் மனைவி ஹிமானியுடன் பிரபுதேவா திருப்பதியில் தரிசனம் மேற்கொண்டார். அப்போதுதான் ஹிமானி சிங் புகைப்படம் வெளியானது.
NEWS EDITOR : RP
Please follow and like us: