உலகலவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிலிப்பின்ஸின் மின்டானோவோவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இன்று காலை 10.13 (பெய்ஜிங் நேரப்படி) ரிக்டர் அளவில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கம் 620 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. அதன் மையம் 6.1 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 123.3 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Please follow and like us: