ஊக்கத்தொகை மயிலாடுதுறை கோட்டத்தில் ஜூலை 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படாது. பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
முன்னுரிமை இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முதல் தளத்தில் உள்ள மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தில் தங்களது வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.நேரடி முகவர்கள் தேர்வில் பங்கேற்க 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் ஆகியோருக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை கள அலுவலர்கள் தேர்வில் பங்கேற்க, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் அதிகாரிகள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் பணிபுரிய வேண்டும் . ரூ.5ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
NEWS EDITOR : RP