க்ரைம் திரில்லர் என்ற பெயரில் அடுத்தடுத்து பல்வேறு படங்கள் வெளி வந்தாலும் ரட்சசன் படத்துடைய கதை எத்தன முறை பார்த்தாலும் வியக்க வைக்கும். அந்த வரிசையை இடம் பிடித்ததா போர் தொழில் படம் என்பது குறித்து தான் இப்பகுதியில் நாம் பார்க்க போறோம்.
2010ம் ஆண்டில் திருச்சி புறநகர் பகுதிகளில் இளம் பெண்கள் வித்தியாசமான முறையில் தொடர்ந்து கொலைப்பட்டு வருகிறார்கள். குற்றவாளியை அப்பகுதியில் உள்ள லோகல் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இந்த வழக்கு சிபிசிஐடி அதிகாரி லோகநாதன்(சரத்குமார் ) தலைமையின் கீழ் விசாரணைக்கு வருகிறது. இவருக்கு உதவியாக பிரகாஷ் (அசோக் செல்வன் ) என்ற புதிதாக வேலையில் சேர்ந்துள்ள அதிகாரியை அனுப்புகிறார்கள். இவர்களுடன் நிக்கிலா விமல் டெக்னிக்கல் அசிஸ்டன்டாக வருகிறார். எந்த வித தடையமுமில்லாமல் நடைபெறும் இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? குற்றவாளி யார் என்று கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதி கதை.
படம் ஆரம்பித்த 5 நிமிடத்தில் கதைக்குள் வந்தடைகிறது. படத்தின் முதல் பாதியிலேயே குற்றவாளியை கண்டுபிடித்துவிடுகின்றனர். அப்பறம் எதுக்கு 2nd ஆப் என்று கேட்டால் அங்க தாங்க டிவிஸ்டுக்கு மேல டிஸ்ட்டு இருக்கு. ஒரே திக்கு திக்கு திக்கு தான்
சரத்குமார் – அசோக் செல்வன்
பிரகாஷ் தன்னுடைய பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக போலீஸ் வேலையில் சேர்ந்தவர். இவர் ஒரு புத்தகப்பழு. உயர் அதிகாரியாக வரும் லோகநாதன் கடுகடுப்பான மனிதர். ஆனால் அனுபவசாலி. கடுகடுப்பாக இருக்கும் லோகநாதன், தனக்கு உதவியாக வரும் செல்லப்பிள்ளை பிரகாஷ்-க்கு கற்றுக்கொடுக்கும் விதம் படத்தை எங்கையோ கொண்டுப்போகிறது. இவர்கள் இருவரின் பாண்ட் ரசிக்க வைக்கிறது.
சரத்குமாருக்கு சொல்லவே தேவையில்லை எக்ஸ்பீரியன்ஸ்ட்டு போலீஸ் ஆக்டர் பட்டைய கிளப்பிட்டார். அசோக் செல்வன் மீசையில்லாமல் வெகுளியான போலீஸாக வருகிறார். அவருடைய நடிப்பும் சிலிர்க்க வைக்கிறது. இரண்டு பேரோட என்ட்ரி மற்றும் ஸ்டைல் தியேட்டர்-ல க்ளாப்ஸ அள்ளுது.
படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ்
படத்தில் ஒரு பயங்கரமான சர்ப்ரைஸ் காத்திக்கிட்டு இருக்கு. இந்த சர்ப்ரைஸ் கேரக்டர் எல்லாருக்கும் தெரிந்த கேரக்டர் என்றாலும் அவரின் வாழ்நாளின் முக்கிய படமாக சொல்ல காத்திக்கிட்டு இருக்கிறது இந்த போர் தொழில் படம். படத்தின் கதைக்கு ஏற்ப அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் சர்ப்ரைஸ் கேரக்டர்.
கதையே போதும் எதுக்கு பாட்டு?
திரில்லர் படத்துக்கு முக்கியமான பங்கு வகிப்பது இசை. இந்த இசையை அற்புதமாக அமைத்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். படத்தில் காதல் சீன்னும், பாட்டும் இல்லை. கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இததாண்டி படத்தில் கேமரா வொர்க் சூப்பர். லோ ஆங்கிள் மற்றும் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிரள வைத்தது. இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு முதல் படம் இது. முதல் படத்துலையே நல்ல பாராட்டை வாங்கிட்டார். இனி என்ன இவர் தமிழ் சினிமாவுக்கு ராஜாதான்.
ராட்சசனுக்கு பிறகு ஒரு நல்ல க்ரைம் திரில்லர் படத்தை பார்த்ததுக்காண எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது. நல்ல திரில்லிங் பீல்ல கொடுத்த படம் Part -2 வந்தாக்கூட பார்க்கிறதுக்கு ரெடின்னு ஆடியன்ஸ் பேசிக்கிறாங்க.
NEWS EDITOR : RP