விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.”தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது; தமிழ் திரையுலகின் ஜாம்பவான்; அவரது நடிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்தது; தமிழ்நாடு அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர் பொதுச் சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்; அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதுவிஜயகாந்த் எனது நெருங்கிய நண்பராக இருந்தார்; அவருடன் உரையாடிய தருணங்களை அன்புடன் நினைவுகூர்கிறேன்; அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.