விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா உலகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இதை தெரிந்து கொண்ட கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பாரதி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ராஜேந்திரனை அணுகி நானும் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், தன்னுடைய கடைக்கு தர்பூசணி பழம் அனுப்பி வைக்குமாறு கேட்டு உள்ளார்.
அதைத்தொடர்ந்து ராஜேந்திரன் கடந்த 14.2.2022 முதல் 12.4.2022 வரை பாலகிருஷ்ணனின் பழக்கடைக்கு 19 லோடு தர்பூசணி பழம் அனுப்பி உள்ளார். ரூ.5 லட்சம் மோசடி தர்பூசணி பழங்களை பெற்றுக் கொண்டு பாலகிருஷ்ணன் அதற்கான பணத்தை ராஜேந்திரனின் மகன் வரதராஜன் என்பவரின் வங்கி கணக்கிற்கு சிறுக, சிறுக அனுப்பி வைத்து விட்டு நிலுவைத்தொகை ரூ.5 லட்சத்து 26 ஆயிரத்து 235-யை கொடுக்காமல் காலம் தாழ்த்தி பல காரணங்களை கூறி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ராஜேந்திரன் கடந்த 20.3.2023 அன்று பணை நாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணன் ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டி பணத்தை கேட்டு வந்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜேந்திரன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனிடம போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரடத்தி வருகி் புகார் மனு அளித்தார்.
NEWS EDITOR : RP