ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த வணிக வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்., சிட்னி நகரில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வாக்லே பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பெர்ட் தேவாலயத்தில் வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு புகுந்த மர்ம நபர், அங்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்த பாதிரியாரை கத்தியால் குத்தினார்.இச்சம்பவத்தில் தேவாலயத்தில் வழிபட வந்திருந்த பக்தர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கத்திக்குத்து நடத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியார் மீது கத்திக்குத்து நடத்திய நபரை போலீசார் கைது..!!
Please follow and like us: