விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட், உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் இருந்து பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஹோகாரா அருகே உள்ள கோவிலுக்கு பக்தர்கள் குழுவினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள முன்சியாரியில் 600 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கார் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும், காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் கானப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP