செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போல் மாற்ற திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 1,683 சதுர அடி நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து கடந்த 2011-ம் ஆண்டு தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்த உத்தரவை ஜூன் 5-ந்தேதி ரத்து செய்த நில நிர்வாக ஆணையர் உத்தரவுக்கு எதிராக தோட்டக்கலை சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், தோட்டக்கலை சங்கத்தின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட நிலத்துடன் சேர்த்து செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா, துபாயில் உள்ள மிராகில் பூங்கா போல் மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
NEWS EDITOR : RP