கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்கக் கூடாது என்ற நோக்கத்திலும், உலக நன்மை வேண்டியும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தபடி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி அவர்களுடைய யாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோதரி பகுதியில் இருந்து தொடங்கியது.
இந்தநிலையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு வந்தனர். வந்தவாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
உலக நன்மைக்காகவும், கொரோனா தாக்கத்தில் இருந்து அனைவரும் விடுபடவும் சாஸ்தான நமஸ்காரம் லோக கல்யாண யாத்திரையாக செல்கிறோம். அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோதரி முதல் ராமேஸ்வரம் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் தெர்மாகோல் போட்டு படுத்து எழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு செல்கிறோம். ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிலோமீட்டர் வரை தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து எழுந்து சென்று யாத்திரையாக செல்கிறோம் என்றனர்.
NEWS EDITOR : RP