கடத்தூரை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது இரண்டு
குழந்தைகளுடன் பேக்கரிக்கு சென்றுள்ளனர். புட்டிங் கேக் இரண்டு ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர். கேக் வந்தவுடன் சிறுவர்கள் அதனை எடுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அப்பொழுது கேக்கில் ஏதோ ஒன்று கருப்பு நிறத்தில் இருப்பதைக் கண்ட பெற்றோர் கேக்கை வாங்கி பார்த்த பொழுது, நடுவில் செய்தித்தாள் துண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும், அந்த செய்தித்தாள் கேக் தயார் செய்யும் பொழுது உள்ளேயே இருந்து வெந்து
உள்ளதையும் கண்டு பேக்கரி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Please follow and like us: