சென்னையின் நுழைவு வாயில் பகுதியான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொது மக்கள் சாலையை கடக்க முடியாமல் பல இன்னல்களை சந்தித்தனர். இதனால், கடந்த 2019 ம் ஆண்டு ரூ.234 கோடி செலவில் நான்கு வழிதடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணியானது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து 2-வபாதையான பெருங்களத்தூரிலிருந்து சீனிவாசராகவ நகர் பகுதிக்கு செல்லக்கூடிய மேம்பால பணியானது கடந்த மாதம் முடிக்கப்பட்டது. ஆனால், மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. இதன் காரணமாக மேம்பாலத்தை விரைவில் திறக்கும்படி கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. சென்னை பெருங்களத்தூர் – பீர்க்கன்காரணையை இணைக்கும் மேம்பாலத்தை சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைத்தார்.
NEWS EDITOR : RP