பாவ் பாஜி ஐஸ்கிரீம் என்ற பெயரில் இளைஞர் பதிவேற்றம் செய்த வீடியோவுக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாவ் பாஜி பிரபலமான மற்றும் சுவையான மாலை நேர சிற்றுண்டி. மகாராஷ்டிர மாநிலத்தில் உதயமான பாவ் பாஜி இந்தியா முழுவதும் ஏன் வெளிநாடுகளில் கூட பிரபலமாகியுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் அதன் சமையல் முறை மாறும். பெரும்பாலும் பாவ் பாஜியை சிற்றுண்டி கடைகளில் சுவைப்பவர்களே அதிகம். பாவ் பாஜி சுவைக்கு மற்றொரு காரணம் அதன் காரமும் அதில் உள்ள வெண்ணெய்யும் தான். அதேபோல் ஐஸ்கிரீம். இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக குழந்தைகள்.
இந்நிலையில் பாவ் பாஜி ஐஸ் கிரீம் என்ற பெயரில் ஒருவர் இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள. பாவ் பாஜி மற்றும் ஐஸ் கிரீம் இரண்டும் சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது . ஆனால் காரம் மற்றும் இனிப்பு சேர்ந்த அந்த கலவையின் சுவையை எப்படி ஏற்றுக்கொள்வது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP