தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா நகர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்து பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 8 விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மேலும், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சோழவரம், பொன்னேரி மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
NEWS EDITOR : RP