சீனாவில் சுத்தமின்மையை காரணம் காட்டி ஹோட்டல்களில் இழப்பீடு கோரி மோசடி..!!

சீனாவின் Zhejiang மாகாணத்தின் Taizhou-வைச் சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவர் ஜியாங். இவர் தனது பெற்றோர் கல்வி செலவுக்காக கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அடிக்கடி ஹோட்டல்களுக்கு சென்று தங்குவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். அங்கு ஹோட்டல் அறைகளில் இறந்த கரப்பான் பூச்சி, பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், தலைமுடி, சிள் வண்டு போன்றவற்றை வைத்துவிட்டு, பின்னர் ஒன்றும் தெரியாதது போல், ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து அறை சுத்தமாக இல்லை என புகார் செய்வார். தொடர்ந்து…

மேலும் படிக்க

மாய உலகிற்கு அழைத்துச் சென்ற ‘ஷங்கர்’..!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண். கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, நாசர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் “ஜரகண்டி” மற்றும்…

மேலும் படிக்க

ஈரோட் ~ 7 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு..!! கூலி தொழிலாளி கைது..!! 

ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோர் வேலைக்கு சென்ற பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தனியாக இருந்திருக்கிறார்.அப்போது, சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளர்சுப்பிரமணியம் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினரிடன் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை…

மேலும் படிக்க

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது..!!

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதனிடையே தனுஷ், ஐஸ்வர்யாவிடம் கடந்த 21ஆம் தேதி தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த…

மேலும் படிக்க

நடிகர் யோகி பாபு முதல்முறையாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார்..!!

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக யோகி பாபு நடிப்பில் ‘போட்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ‘மண்ணாங்கட்டி, வானவன் மற்றும் ஜோரா கைய தட்டுங்க’ போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் யோகி பாபு ‘டிராப் சிட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை திருச்சியை சேர்ந்த பிரபல…

மேலும் படிக்க

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்..? என்பது குறித்து சாய்ரா பானு விளக்கம்..!!

 ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து அவரின் மனைவி சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சாய்ரா பானு கூறியிருப்பதாவது, “நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த 2 மாதங்களாக எனது உடல்நிலை சரியில்லை. அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து விலகியிருக்கிறேன். அவரைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். உலகிலேயே தலைசிறந்த மனிதர் அவர். என்னுடைய குழந்தைகள், ஏ.ஆர்.ரஹ்மான் என யாரையும் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது….

மேலும் படிக்க

‘சூர்யா 45’ படத்தில் ‘த்ரிஷா’ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!!

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா? இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா? என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இதனை சமீபத்தில் உறுதிசெய்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை…

மேலும் படிக்க

மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்..!!தனியறைக்கு மாற்றம்..!!

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளார். இன்று காலை அவரை சந்தித்தோம். நன்றாக பேசுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாலாஜி மதியத்திற்கு…

மேலும் படிக்க

சிறையில் கைதிகள் இடையே மோதல்..!!

தென் அமெரிக்காவில் ஈக்வடார் என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை கவ்யாஹுலி நகரில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று (நவ.13) அதிகாலை இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மோதலை தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் கைதிகள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த…

மேலும் படிக்க

ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையின் போதே தங்கையின் கணவனை கத்தியால் குத்திய அண்ணனால் பரபரப்பு..!!

ஆவடி காமராஜர் நகர், தாமரை தெருவைச் சேர்ந்தவர் குரு சத்யா (32). ஓட்டுநராக பணிபுரியும் இவர் திவ்யா (24) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குரு சத்யாவுக்கு, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யாவுக்கும், திவ்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, திவ்யா விவாகரத்து கோரி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram