
கிண்டி மேம்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து –
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தீனதயாளன் என்ற இளைஞர் இன்று நள்ளிரவு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கிண்டி மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மேம்பால தடுப்புச் சுவற்றில் வேகமாக மோதியதில், தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்றொரு இளைஞர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து…