👑 பிரிட்டன் மன்னராக சார்லஸுக்கு நாளை முடிசூட்டு விழா

கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்  இயற்கை எய்தினார். இதனையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா உடனடியாக நடைபெறவில்லை. ராணிக்கு துக்கம் அனுசரித்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு முடிசூட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா பிரிட்டனில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. ராணி…

மேலும் படிக்க

Governor, Chief Minister குறித்து அவதூறு |  வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பிரிவு பரிந்துரை

சென்னை: ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை நீக்க யூடியூப்க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சமூக வலைதளங்களில், தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில், இதுவரை 40…

மேலும் படிக்க

😡 காவல்துறையினர் எல்லை மீறி நடந்துகொண்டனர் | தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள் !

புதுடெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜந்தர் மந்தர் பகுதியில் மழை பெய்ததால் வீரர், வீராங்கனைகள் ஏற்கெனவே பயன்படுத்திய படுக்கைகள் நனைந்திருந்தன. இதனால் இவற்றுக்கு…

மேலும் படிக்க

மணிப்பூரில் ரயில் சேவைகள் திடீர் ரத்து!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியின மலைவாழ் மக்கள் பேரணி நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக வெடித்தது. சுராசந்த்பூர் பகுதியில் வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. சுராசந்த்பூர், பிஸ்னுபூர், இம்பால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. கலவரம்…

மேலும் படிக்க

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் | மதுரையில் கோலாகலம்

மதுரை: கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பரவசத்துடன் முழங்க பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இன்று அதிகாலை 5.52 மணிக்கு இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் அழகர் எழுந்தருளினார். அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடிக்கொள்ளவும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்…

மேலும் படிக்க

வேட்புமனுவில் தவறான தகவல் | இபிஎஸ் மீது வழக்குப் பதிவு

சென்னை: வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அவர், தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார். எனவே அவர்மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி,…

மேலும் படிக்க

தமிழகத்தில் 4 இடங்களில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ ‘FOOD STREET’- ரூ. 4 கோடியில் அமைக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் ரூ. 4 கோடி செலவில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்து. நாடு முழுவதும் 100 ஆரோக்கியமான உணவு வீதிகளை உருவாக்கும் உணவு வீதி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயல்படுத்த உள்ளது. உணவு வர்த்தகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்கப்படுத்தி, அதன் வாயிலாக உணவால் ஏற்படும் நோய்களைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதை செயல்படுத்துவதற்கு சோதனை…

மேலும் படிக்க

 “திராவிட மாடலே இனி அனைத்து மாநில ஆட்சி நிர்வாக ஃபார்முலா” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், “பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram