கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா-CONGRESS.அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கர்நாடாகாவில் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இருவரையும் கட்சி மேலிடம் அழைத்து பேசியது 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில், இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது….