கேரளாவில் இருவருக்கு MONKEYPOX தொற்று உறுதி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்த இருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவமனைகளில் கூடுதலாக தனி வார்டுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். நிலைமையை ஆய்வு செய்வதற்காக மாநில அளவிலான விரைவு பொறுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரிடம்…

மேலும் படிக்க

 கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 13 ஆண்டுகளாக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2011 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உள்பட 3,506 ரன்கள் குவித்த…

மேலும் படிக்க

“என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது”~ உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்..!!! 

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.இளம் செஸ் சாம்பியனாக வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது. வெற்றியுடன் திரும்பும் போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி…

மேலும் படிக்க

Pushpa 2 ~ தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்..!!

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்றார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி…

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகையில் வைக்கப்படும் ட்விஸ்ட் !

ரேஷன் கடைகளில் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு பரிசுத்தொகையில் வெல்லம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான முடிவை இந்த வாரமே தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை எஸ் விமலநாதன் சார்பாக இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு…

மேலும் படிக்க

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு லேசான மழை பெய்தது. இதனை தொடர்ந்து புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த சூழலில், வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை…

மேலும் படிக்க

தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு –

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன், வளர்மதி. இவர்களுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. அதில் தென்னை மட்டை உரிப்பதற்காக அக்கிராமத்தை சேர்ந்த கல்யாணி, ஜெயலட்சுமி , சின்னசாமி என மூவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென அங்கு வந்த மலை தேனீக்களின் கூட்டம் மூவரையும் தாக்கியுள்ளது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் தேனீக்கள் தாக்கியதால் நிலை குலைந்து போன மூவரும், அருகே இருந்த பேருந்து நிலையத்தில் மறைவதற்க்காக ஓடியுள்ளனர். ஆனால் இவர்களை விடாமல் துரத்தி சென்ற…

மேலும் படிக்க

தங்கம் விலை உயர்வு – 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை…

மேலும் படிக்க

45 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு !

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காசா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாஹ் வீட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அவரையும் கொலை…

மேலும் படிக்க

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை !

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுவாட்டு தீவு. வானுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ. தொலைவில் இன்று (டிச.17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வானுவாட்டு தீவை சுற்றியுள்ள…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram