கேரள மாநிலம் மூணாறில் பல வாரங்களாக மக்கள் வசிக்கும் பகுதியில் நுழையாமல் இருந்த படையப்பா காட்டு யானை சமீபத்தில் சொக்கநாடு தேயிலை தோட்டத்தில் ரேஷன் கடையை சேதப்படுத்தியது. இந்தநிலையில் மூணாறு தலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பாம்பன்மலை டிவிசன் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு நுழைந்த யானை அங்கிருந்த ராஜேந்திரன் என்பவரின் வீட்டை தகர்த்து சமையலறையில் இருந்த அரிசி மூட்டையை தூக்கிச் சென்றது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பட்டாசுகள் வெடித்தும், அதிக சத்தத்துடன் கூச்சலிட்டும் அந்தபகுதியில் இருந்து யானையை பொதுமக்கள் ரட்டினர். படையப்பா யானையின் தாக்குதல் மீண்டும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே யானையை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
NEWS EDITOR : RP